pallivasalmurasu.bsky.social
@pallivasalmurasu.bsky.social
3 followers 1 following 2.7K posts
Posts Media Videos Starter Packs
உங்ககிட்ட இந்த திறமை இருக்கா? Zoho-வில் வேலை ரெடி: ஸ்ரீதர் வேம்புவே சொல்லிட்டாரு!

சென்னை: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (Zoho Corporation) தற்போது பல்வேறு புதிய முயற்சிகளால் உலகளாவிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. தற்போது, ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு,…
உங்ககிட்ட இந்த திறமை இருக்கா? Zoho-வில் வேலை ரெடி: ஸ்ரீதர் வேம்புவே சொல்லிட்டாரு!
சென்னை: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (Zoho Corporation) தற்போது பல்வேறு புதிய முயற்சிகளால் உலகளாவிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. தற்போது, ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “கணித திறன் மிகுந்த நபர்களுக்கு Zohoவில் நேரடி வேலை வாய்ப்பு” இருப்பதாக அறிவித்துள்ளார். அண்மையில் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் ஜோஹோ மெயில் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், வாட்ஸ்அப் போலவே ஜோஹோ உருவாக்கிய அரட்டை செயலி (chat app) இந்தியா முழுவதும் டிரெண்டானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் “Make in India” நோக்கத்தில் ஜோஹோ மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.
pallivasalmurasu.wpcomstaging.com
வேலம்மாள் ஸ்டேடியத்தில் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுமா? டிஎன்சிஏ தலைவர் ஸ்ரீனிவாசராஜ் விளக்கம் – ஏமாற்றத்தில்மதுரை ரசிகர்கள் !

மதுரை: புதிதாக திறக்கப்பட்ட மதுரை வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய…
வேலம்மாள் ஸ்டேடியத்தில் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுமா? டிஎன்சிஏ தலைவர் ஸ்ரீனிவாசராஜ் விளக்கம் – ஏமாற்றத்தில்மதுரை ரசிகர்கள் !
மதுரை: புதிதாக திறக்கப்பட்ட மதுரை வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவர் ஸ்ரீனிவாசராஜ் பதில் அளித்துள்ளார். மதுரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லை என அவர் கூறியதுடன், வேலம்மாள் மைதானம் டிஎன்சிஏவுடன் இணைக்கப்பட்ட பின்னரே ரஞ்சி மற்றும் டிஎன்பிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி திறந்து வைத்தார்.
pallivasalmurasu.wpcomstaging.com
ஐடி வேலையை விட்டு ஐஸ்கிரீம் விற்று வெற்றியடைந்த கரூர் இளைஞர் பிரதீப்!

கரூர்:“நல்ல சம்பளத்துடன், செட்டில் ஆன வாழ்க்கையை விட்டு யாராவது ஐஸ்கிரீம் விற்க போவார்களா?” என்று அனைவரும் கேட்ட நேரத்தில், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் கண்ணன் எடுத்த முடிவு இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு…
ஐடி வேலையை விட்டு ஐஸ்கிரீம் விற்று வெற்றியடைந்த கரூர் இளைஞர் பிரதீப்!
கரூர்:“நல்ல சம்பளத்துடன், செட்டில் ஆன வாழ்க்கையை விட்டு யாராவது ஐஸ்கிரீம் விற்க போவார்களா?” என்று அனைவரும் கேட்ட நேரத்தில், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் கண்ணன் எடுத்த முடிவு இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கமாக மாறியுள்ளது. ஒராக்கிள் (Oracle) நிறுவனத்தில் பெங்களூரில் உயர் பதவியில் பணிபுரிந்த பிரதீப், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வேலைவிட்டுப் புதிய சுய தொழிலைத் தொடங்கினார் — ஃபல்லூடா ஐஸ்கிரீம் விற்பனை! வேலை விட்ட முடிவு பிரதீப் கண்ணன் கூறியதாவது: “நான் பெங்களூரில் ஒராக்கிள் நிறுவனத்தில் ஆபரேஷன் ஹெடாக வேலை செய்தேன்.
pallivasalmurasu.wpcomstaging.com
“உனக்குத்தான் கொம்பு முளைச்சிருக்கா?” – செய்தியாளருடன் தகராறில் அண்ணாமலை… வீடியோ வைரல்!

சென்னை:தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஒரு செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இணை…
“உனக்குத்தான் கொம்பு முளைச்சிருக்கா?” – செய்தியாளருடன் தகராறில் அண்ணாமலை… வீடியோ வைரல்!
சென்னை:தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஒரு செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், ஒரு செய்தியாளர் மைக்கை நீட்டியபோது, “நான் எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவேன்” என்று அண்ணாமலை கூறி கடுப்படைந்தார். பின்னர் அந்த செய்தியாளரை நோக்கி, “தமிழ்நாடு மீடியாக்களுடன் 4-5 ஆண்டுகளாக நாங்கள் நல்ல உறவோடு இருக்கிறோம். புதுசா வந்து ஆட்டம் போடாதீங்க.
pallivasalmurasu.wpcomstaging.com
சென்னை மெட்ரோவில் பெரிய மாற்றம்! புதிய வணிக வளாகங்கள் – நிலையங்கள் கலகலப்பாக மாறும்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் 16 மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வணிக ரீதியிலான கட்டிட மேம்பாடுகளுக்கான ஆலோசகரைத் தேர்வு செய்ய…
சென்னை மெட்ரோவில் பெரிய மாற்றம்! புதிய வணிக வளாகங்கள் – நிலையங்கள் கலகலப்பாக மாறும்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் 16 மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வணிக ரீதியிலான கட்டிட மேம்பாடுகளுக்கான ஆலோசகரைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ நிலையங்களில் புதிய கமர்ஷியல் வளாகங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெரும் அளவிலான மேம்பாட்டு திட்டம் இந்த மேம்பாட்டுப் பணிகள் மொத்தம் 88,148 சதுர மீட்டர் (9.48 லட்சம் சதுர அடி) பரப்பளவில் நடைபெறவுள்ளது. இது சென்னையின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மெட்ரோ நிலையங்களின் சுற்றுப்புற வணிக வளர்ச்சி
pallivasalmurasu.wpcomstaging.com
உலகில் முதலில் உருவான 10 நாடுகள் – இந்தியா எந்த இடத்தில்?

தற்போதைய உலகம் 195 நாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்நாடுகளின் எல்லைகள், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அரசியல் மற்றும் வரலாற்று மாற்றங்களால் உருவானவை. அதனால் “உலகில் மிகப் பழமையான நாடு எது?” என்ற கேள்விக்கு துல்லியமான பதில் கூறுவது…
உலகில் முதலில் உருவான 10 நாடுகள் – இந்தியா எந்த இடத்தில்?
தற்போதைய உலகம் 195 நாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்நாடுகளின் எல்லைகள், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அரசியல் மற்றும் வரலாற்று மாற்றங்களால் உருவானவை. அதனால் “உலகில் மிகப் பழமையான நாடு எது?” என்ற கேள்விக்கு துல்லியமான பதில் கூறுவது கடினம். எனினும், இன்றும் நீடித்து வரும் நாகரிகங்களின் தொன்மை மற்றும் அரசியல் அமைப்பின் வரலாற்றின் அடிப்படையில் உலகின் மிகப் பழமையான நாடுகளின் பட்டியல் ஒன்றை உருவாக்கலாம். இந்த நாடுகள், நீண்டகால கலாச்சாரம், மரபு, மற்றும் தொடர்ச்சியான அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகள் பழமையான வரலாற்றைக் கொண்டிருந்தாலும், உண்மையில் உலகின் முதன்மையான நாகரிகங்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உருவாகியவையே.
pallivasalmurasu.wpcomstaging.com
ஐடி துறையில் AI புரட்சி – இந்திய பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய சவால்!

ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, உலகளாவிய அளவில் ஐடி துறையின் இயங்கும் முறையையே தலைகீழாக மாற்றி அமைத்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய ஐடி நிறுவனங்களிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.…
ஐடி துறையில் AI புரட்சி – இந்திய பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய சவால்!
ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, உலகளாவிய அளவில் ஐடி துறையின் இயங்கும் முறையையே தலைகீழாக மாற்றி அமைத்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய ஐடி நிறுவனங்களிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலையில், பெரும்பாலான சேவைகள் ஏஐ அடிப்படையில் செயல்பட தொடங்கியுள்ளதால், நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளையும் பணிமுறைகளையும் அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதன் விளைவாக கோடிங், கஸ்டமர் சப்போர்ட், அப்ளிகேஷன் பராமரிப்பு போன்ற பல துறைகளில் மனித வேலைகளை ஏஐ மாறாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் …
pallivasalmurasu.wpcomstaging.com
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: ரூ.1000 பெறுவதற்கான கடைசி வாய்ப்பு – நவம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை:தமிழகத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாமின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான (Kalaignar Magalir Urimai Thittam) விண்ணப்பம் செய்ய…
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: ரூ.1000 பெறுவதற்கான கடைசி வாய்ப்பு – நவம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை:தமிழகத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாமின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான (Kalaignar Magalir Urimai Thittam) விண்ணப்பம் செய்ய பெண்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள இந்த முகாம்கள் மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. விண்ணப்பித்தவுடன், விண்ணப்பங்கள் பத்து நிமிடங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு அளிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட ஐந்து ஆவணங்கள் மட்டுமே போதுமானவை:
pallivasalmurasu.wpcomstaging.com
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: நள்ளிரவில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய மூன்று கொடூரர்கள்! எப்படி பிடிபட்டார்கள்?

கோவை: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய மூவரையும் போலீசார் நள்ளிரவில் துப்பாக்கிச்சூட்டில் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில்…
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: நள்ளிரவில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய மூன்று கொடூரர்கள்! எப்படி பிடிபட்டார்கள்?
கோவை: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய மூவரையும் போலீசார் நள்ளிரவில் துப்பாக்கிச்சூட்டில் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலையம் அருகே தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த 21 வயது மாணவி, ஆட்டோமொபைல் கடை நடத்தும் 25 வயது இளைஞருடன் காதலில் இருந்தார். விடுமுறை நாளில் இருவரும் காரில் வெளியே சென்றனர். இரவு நேரத்தில் விமான நிலையம் பின்புறம் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் காரில் பேசிக்கொண்டிருந்தபோது, மது போதையில் வந்த மூன்று பேர் அங்கு வந்து அவர்களை மிரட்டினர்.
pallivasalmurasu.wpcomstaging.com
IBPS Clerk வேலைவாய்ப்பு – காலியிடங்கள் 13,000-ஐ கடந்தது! தேர்வர்களுக்கு பெரிய ஹேப்பி நியூஸ்!

சென்னை: வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் IBPS (Institute of Banking Personnel Selection) மொத்தம் 10,277 கிளர்க் பணியிடங்களுக்கு முன்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான முதல்நிலைத் தேர்வுகள்…
IBPS Clerk வேலைவாய்ப்பு – காலியிடங்கள் 13,000-ஐ கடந்தது! தேர்வர்களுக்கு பெரிய ஹேப்பி நியூஸ்!
சென்னை: வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் IBPS (Institute of Banking Personnel Selection) மொத்தம் 10,277 கிளர்க் பணியிடங்களுக்கு முன்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான முதல்நிலைத் தேர்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில், தற்போது காலியிடங்கள் எண்ணிக்கை 13,533 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக IBPS அறிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி நிலவுகிறது. வங்கி பணிகளுக்கான தேர்வுகள் IBPS தேர்வுகள் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் (State Bank of India தவிர) உள்ள காலியிடங்களை நிரப்பும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.
pallivasalmurasu.wpcomstaging.com
தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் உருவாக்கம் – SIR மூலம் தீவிர திருத்தம் தொடக்கம்!

சென்னை: ஆண்டுதோறும் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்திலிருந்து மாறுபட்டு, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள “சிறப்பு தீவிர திருத்தம்” (SIR) மூலம் புதிய வாக்காளர் பட்டியல்…
தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் உருவாக்கம் – SIR மூலம் தீவிர திருத்தம் தொடக்கம்!
சென்னை: ஆண்டுதோறும் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்திலிருந்து மாறுபட்டு, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள “சிறப்பு தீவிர திருத்தம்” (SIR) மூலம் புதிய வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்த தகவலை, ECI சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தலைமையிலான குழு தலைமை நீதிபதி மாநிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் விளக்கமளித்தது. SSR மற்றும் SIR ஆகிய இரு நடைமுறைகளுக்கிடையேயான வேறுபாடுகளை அவர் விளக்கினார்.
pallivasalmurasu.wpcomstaging.com
ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் Associate System Engineer பணிக்கான வேலை வாய்ப்பு – 21 இடங்களிலான நியமனம்

ஏராளமான காலியிடங்கள் – சென்னை, கோவை உட்பட பல இடங்களில் பணி! சென்னை: முன்னணி ஐடி நிறுவனம் IBM தற்போது Associate System Engineer பதவிக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது. தேர்வானவர்கள் தமிழ்நாட்டில்…
ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் Associate System Engineer பணிக்கான வேலை வாய்ப்பு – 21 இடங்களிலான நியமனம்
ஏராளமான காலியிடங்கள் – சென்னை, கோவை உட்பட பல இடங்களில் பணி! சென்னை: முன்னணி ஐடி நிறுவனம் IBM தற்போது Associate System Engineer பதவிக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது. தேர்வானவர்கள் தமிழ்நாட்டில் சென்னையில், கோவையில் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள மொத்த 21 இடங்களில் பணியாற்ற வாய்ப்பு உண்டு. பணி விவரம் இந்த வேலை என்ட்ரி-லெவல் (Entry Level) பதவியாக இருக்கும். தேர்வான நபர்கள் அதன் பிறகு நிறுவனத்தின் தொழில்நுட்ப டெலிவரி சென்டர்களில் (Delivery Centers) பணி புரியுவர். பணியிடங்கள்: சென்னை, கோவை, பெங்களூர், மைசூர், அகமதாபாத், சண்டிகர், திருவனந்தபுரம், லக்னோ, மங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, குர்கிராம், நொய்டா, விசாகப்பட்டினம், நவி மும்பை, கொச்சி, ஜெய்ப்பூர், புவனேஸ்வர், டெல்லி.
pallivasalmurasu.wpcomstaging.com
ஆம்னி பஸ்சுக்கு கடும் போட்டி! எஸ்இடிசி இயக்கும் வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்துகள் – எப்போது சாலையில்? முழு அப்டேட்!

தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக சொகுசு வசதியுடன் புதிய வோல்வோ மல்டி ஆக்சில பேருந்துகளை தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) இயக்கத் தீர்மானித்துள்ளது. பெங்களூரில்…
ஆம்னி பஸ்சுக்கு கடும் போட்டி! எஸ்இடிசி இயக்கும் வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்துகள் – எப்போது சாலையில்? முழு அப்டேட்!
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக சொகுசு வசதியுடன் புதிய வோல்வோ மல்டி ஆக்சில பேருந்துகளை தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) இயக்கத் தீர்மானித்துள்ளது. பெங்களூரில் தயாரிக்கப்பட்ட இந்த 20 புதிய பேருந்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. சென்னை, நெல்லை, நாகர்கோவில், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட நீண்ட தூர வழித்தடங்களில் இயங்கவுள்ள இந்த பேருந்துகள் அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, இவை இந்த மாத இறுதிக்குள் அரசு போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. 2025-26ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் மொத்தம் 130 புதிய பேருந்துகள் சேர்க்கப்பட உள்ளன.
pallivasalmurasu.wpcomstaging.com
தங்க விலை திடீர் சரிவு..! நகை ரசிகர்களுக்கு இனிய செய்தி – இன்று கிராம் விலை எவ்வளவு?

தங்க விலை கடந்த சில வாரங்களில் அதிரடியாக உயர்ந்தது. தினமும் காலை, மாலை என இரு நேரங்களிலும் விலை தாறுமாறாக உயர்ந்ததால், விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடுமோ என நகை ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால்…
தங்க விலை திடீர் சரிவு..! நகை ரசிகர்களுக்கு இனிய செய்தி – இன்று கிராம் விலை எவ்வளவு?
தங்க விலை கடந்த சில வாரங்களில் அதிரடியாக உயர்ந்தது. தினமும் காலை, மாலை என இரு நேரங்களிலும் விலை தாறுமாறாக உயர்ந்ததால், விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடுமோ என நகை ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அதன் பின்னர், நகை பிரியர்களுக்கு சிறு நிம்மதி அளிக்கும் வகையில் தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. அமெரிக்க டாலர் வலுவடைந்தது மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டை குறைத்தது போன்ற காரணங்களால் தங்க விலை சரிவை கண்டதாக சந்தை நிபுணர்கள் விளக்கினர். இதனால் விலை மெல்ல சரிந்து, ஒரு கட்டத்தில் ரூ.90 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது.
pallivasalmurasu.wpcomstaging.com
சூப்பர் வாய்ப்பு! HCL நிறுவனத்தில் வேலை – நவம்பர் 8 இல் நேர்முகம் சென்னையில்!

சென்னை: முன்னணி ஐடி நிறுவனம் HCL Technologies தற்போது டேட்டா இன்ஜினியர் (Data Engineer) பணிக்கு விண்ணப்பத்தார்களை அழைக்கிறது. இந்த பணிக்கான நேர்முகம் நவம்பர் 8 அன்று காலை சென்னையில் நடைபெறும். பணி விவரம்:HCL நிறுவனம் GCP…
சூப்பர் வாய்ப்பு! HCL நிறுவனத்தில் வேலை – நவம்பர் 8 இல் நேர்முகம் சென்னையில்!
சென்னை: முன்னணி ஐடி நிறுவனம் HCL Technologies தற்போது டேட்டா இன்ஜினியர் (Data Engineer) பணிக்கு விண்ணப்பத்தார்களை அழைக்கிறது. இந்த பணிக்கான நேர்முகம் நவம்பர் 8 அன்று காலை சென்னையில் நடைபெறும். பணி விவரம்:HCL நிறுவனம் GCP Data Engineering Hackathon நிகழ்ச்சியை முன்னெடுக்கிறது. இதற்காக பின்வரும் திறன்கள் தேவையாக கூறப்பட்டுள்ளன: BigQuery Cloud Composer அல்லது Air Flow Data Flow, Dataproc அல்லது Datafusion Python அல்லது PySpark DBT, SQL, Looker மேலும் GKE, Spanner, Harness, GenAI போன்றவை தெரிந்திருப்பது கூடுதல் பிளஸ்
pallivasalmurasu.wpcomstaging.com
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிப்பு – இந்தமுறை முன்கூட்டியே துவங்குமா?

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நவம்பர் 4ஆம் தேதி சென்னையில் மாநில கல்வித்துறை சார்பில், அனைத்து…
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிப்பு – இந்தமுறை முன்கூட்டியே துவங்குமா?
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நவம்பர் 4ஆம் தேதி சென்னையில் மாநில கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வு அட்டவணையை அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. கடந்த கல்வியாண்டு முதல் …
pallivasalmurasu.wpcomstaging.com
நாடு முழுக்க லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ₹3,000 பிஎஃப் கணக்கில் வரவு – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் பல லட்சம் ஊழியர்களின் EPFO (Employees’ Provident Fund Organisation) கணக்குகளில் ₹3,000 தொகை ஒரே நாளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. புதியதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்காக,…
நாடு முழுக்க லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ₹3,000 பிஎஃப் கணக்கில் வரவு – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
நாடு முழுவதும் பல லட்சம் ஊழியர்களின் EPFO (Employees’ Provident Fund Organisation) கணக்குகளில் ₹3,000 தொகை ஒரே நாளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. புதியதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்காக, நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் EPFO கணக்குகள் தொடங்கப்படுகின்றன. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் புதிய உறுப்பினர்கள் EPFO-வில் இணைந்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் மாதத்தில் EPFO-வில் புதிதாக இணைந்த உறுப்பினர்களின் கணக்குகளில் குறைந்தபட்சம் ₹3,000 தொகை மத்திய அரசால் செலுத்தப்படும்
pallivasalmurasu.wpcomstaging.com
தெரு நாய்க்கடி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம்!

தெரு நாய்க்கடி பிரச்சனையைச் சுற்றிய வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் இருந்தன. இதையடுத்து, அந்த மாநிலங்களின் தலைமைச்…
தெரு நாய்க்கடி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம்!
தெரு நாய்க்கடி பிரச்சனையைச் சுற்றிய வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் இருந்தன. இதையடுத்து, அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கிணங்க, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். முன்னதாக தலைமைச் செயலாளர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரியிருந்தாலும், அதனை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
pallivasalmurasu.wpcomstaging.com
Gold Rate Today: தங்கம் விலை தாறுமாறு! சென்னையில் 91 ஆயிரத்தை நெருங்கிய கோல்டு!

சென்னை: தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 3) மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.90,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,350-க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலையும் சிறிய அளவில்…
Gold Rate Today: தங்கம் விலை தாறுமாறு! சென்னையில் 91 ஆயிரத்தை நெருங்கிய கோல்டு!
சென்னை: தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 3) மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.90,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,350-க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலையும் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை (03.11.2025): ஒரு கிராம் தங்கம்: ரூ.11,350 ஒரு சவரன் தங்கம்: ரூ.90,800 வெள்ளி: கிராமுக்கு ரூ.168, கிலோக்கு ரூ.1,68,000 தங்க விலை மாற்றங்கள் (நவம்பர் 1 முதல்):
pallivasalmurasu.wpcomstaging.com
அதிர்ச்சி தகவல்: இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்களில் முதலிடத்தை பிடித்த மதுரை!

இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்கள் பட்டியலில், மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேக்ஷன் 2024-25 ஆய்வின் அடிப்படையில்…
அதிர்ச்சி தகவல்: இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்களில் முதலிடத்தை பிடித்த மதுரை!
இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்கள் பட்டியலில், மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேக்ஷன் 2024-25 ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில், மதுரை முதலிடத்தில், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா இரண்டாம் இடத்தில், சென்னை மூன்றாம் இடத்தில், ராஞ்சி, பெங்களூர், மும்பை, ஸ்ரீநகர், டெல்லி ஆகிய நகரங்கள் பின்னர் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியல் இந்தியாவின் நகரங்களின் சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை, பொது இடங்களின் தூய்மை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
pallivasalmurasu.wpcomstaging.com
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை: பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சென்னை: சபரிமலையில் மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அல்லது 17ம் தேதிகளில் மண்டல…
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை: பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
சென்னை: சபரிமலையில் மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அல்லது 17ம் தேதிகளில் மண்டல பூஜை தொடங்குகிறது. அதேபோல் ஜனவரி 14 அல்லது 15ம் தேதிகளில் மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இந்த இரண்டு காலங்களிலும் சபரிமலைக்கு நாடு முழுவதும் இருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தருவதால், கூடுதல் ரயில்களின் தேவை ஏற்படுகிறது. சிறப்பு ரயில் விவரங்கள்: வண்டி எண் 06111 / 06112: நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.
pallivasalmurasu.wpcomstaging.com
அமெரிக்கர்களை பதறவிடும் பிரம்மாண்ட முருகன் சிலை… கரோலினாவில் கட்டப்படும் கோவிலால் பரபரப்பு!

நியூயார்க்: அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வரும் முருகன் கோவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவில் உலகின் மிக உயரமான முருகன்…
அமெரிக்கர்களை பதறவிடும் பிரம்மாண்ட முருகன் சிலை… கரோலினாவில் கட்டப்படும் கோவிலால் பரபரப்பு!
நியூயார்க்: அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வரும் முருகன் கோவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவில் உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்திடும் புனித தலமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதேசமயம், சில அமெரிக்க சமூக வட்டாரங்களில் இந்தக் கோவில் திட்டம் மீது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கோவில் திட்டத்தின் பின்னணி:2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் தலைமையில் வேகமாக முன்னேறி வருகிறது. வட கரோலினா மாநிலத்தின் மோன்கூர் நகரில்
pallivasalmurasu.wpcomstaging.com
“உங்க வெற்றியால் தலைமுறையே மாறப் போகுது..” உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, சச்சின் வாழ்த்து!

மும்பை: இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2025 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டெங்கும் மகிழ்ச்சி அலைகள் எழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி,…
“உங்க வெற்றியால் தலைமுறையே மாறப் போகுது..” உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, சச்சின் வாழ்த்து!
மும்பை: இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2025 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டெங்கும் மகிழ்ச்சி அலைகள் எழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் தாதா சச்சின் டெண்டுல்கர், ஜாவலின் சாம்பியன் நீரஜ் சோப்ரா, கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். வரலாற்று வெற்றி:ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவற்றுக்கு அடுத்து, ஒருநாள் மகளிர் உலகக்கோப்பையை வென்ற …
pallivasalmurasu.wpcomstaging.com
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3! — பலி, காயமடைந்தோர் பற்றிய தகவல் வெளியீட!

ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மசார்-இ-ஷெரிஃப் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்டத சுமார் 5.23…
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3! — பலி, காயமடைந்தோர் பற்றிய தகவல் வெளியீட!
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மசார்-இ-ஷெரிஃப் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்டத சுமார் 5.23 லட்சம் மக்கள் வசிக்கும் இந்நகரில், நிலநடுக்கம் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுவரை 4 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. பெரிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட பேரிடர் நிலநடுக்கத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
pallivasalmurasu.wpcomstaging.com
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக.. தமிழக மீனவர்கள் 35 பேர் கைது! இலங்கை கடற்படை அராஜகம்

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழகத்தையும் புதுச்சேரியையும் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் சென்ற மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகையும் இலங்கை கடற்படை…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக.. தமிழக மீனவர்கள் 35 பேர் கைது! இலங்கை கடற்படை அராஜகம்
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழகத்தையும் புதுச்சேரியையும் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் சென்ற மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி:தமிழக கடற்கரையோர மீனவர்கள் நீண்டநாளாக இலங்கை கடற்படையினரின் துன்புறுத்தலால் அவதியுறுகின்றனர். இதேநேரத்தில், இலங்கையில் சமீபத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருப்பதால், மீனவர் பிரச்சனைக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவியது.
pallivasalmurasu.wpcomstaging.com