“உங்க வெற்றியால் தலைமுறையே மாறப் போகுது..” உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, சச்சின் வாழ்த்து!
மும்பை: இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2025 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டெங்கும் மகிழ்ச்சி அலைகள் எழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் தாதா சச்சின் டெண்டுல்கர், ஜாவலின் சாம்பியன் நீரஜ் சோப்ரா, கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். வரலாற்று வெற்றி:ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவற்றுக்கு அடுத்து, ஒருநாள் மகளிர் உலகக்கோப்பையை வென்ற …