maatram.org
banner
maatram.bsky.social
maatram.org
@maatram.bsky.social
17 followers 1 following 340 posts
Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 www.maatram.org
Posts Media Videos Starter Packs
மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்… maatram.org/articles/12376

by Environmental activist Sajeewa Chamikara

#lka #SriLanka #SaveMannar #Mannar
அவர் சிறுவயதாக இருந்தபோது, அவரும் ஏனைய தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளும் தோட்ட உரிமையாளரின் மகளுடன் சென்று விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் செல்லாவிட்டால் தாக்கப்படுவார்கள் என்று வள்ளியம்மா நினைவு கூருகிறார். தனது பெற்றோர் முன்னிலையில் குறைந்தது இரண்டு முறையாவது தாக்கப்பட்டதை அவர் நினைவு கூருகிறார். maatram.org/articles/12370

#Hammeliyawatte #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #Gall #மலையகம்
ஹம்மெலியவத்தை தோட்டம்: பல தசாப்தகால சுரண்டல் மற்றும் உடனடி வெளியேற்றம்
Photo, VOPP என்பது வயதான கோபால் சந்தானம், ஒரு மலையகத் தமிழர், 1945ஆம்ஆம் ஆண்டு காலி மாவட்டத்தின் பத்தேகம பிரிவில் உள்ள ஹம்மெலியவத்தை என்ற தோட்டத்தில் பிறந்தார். அவர் தனது 14 வயதிலிருந்து தோட்டத்தில…
maatram.org
குறைந்தது இரண்டு தலைமுறையினர் பாடசாலைக்கு செல்லவில்லை. ஆனால், உரிமையாளரின் மனைவி பாடசாலை ஒன்றின் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்தபோது, தனது சொந்த தோட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை மறுத்து, எதிர்த்து வந்துள்ளார். maatram.org/articles/12370

#Hammeliyawatte #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #Gall #மலையகம் #மலையகத்தமிழர்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை றோம் சாசனத்தில் கைச்சாத்திட்ட அரசுகளே நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரையில் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எத்தனை அரசுகளினால் உருப்படியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது இன்னொரு கேள்வி. maatram.org/articles/12366

by V. Thanabalasingham

#lka #SriLanka #Genocide #WarCrimes
நிமலராஜன், என்னுடைய சகோத​ரனே… கடைசியாக நீயே உன்னை சுட்டுக் கொண்டாய்… குண்டும் எறிந்து கொண்டாய்… maatram.org?p=9353

by Sanath Balasooriya

#lka #SriLanka #Nimalarajan 📷 @jdslanka.bsky.social
ஊரடங்கு அமுலில் இருந்தவேளை துப்பாக்கி, கைக்குண்டு, கத்தி சகிதம் சைக்கிள்களில் வந்த கொலையாளிகளுக்கு சோதனை சாவடியை திறந்துவிட உத்தரவு கிடைத்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடமிருந்தா? maatram.org?p=5078

#lka #SriLanka #Nimalarajan #EndImpunity
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 25 வருடங்கள்

வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்திருக்கும் நிலையில், NPP அரசாங்கம் விசாரணையை மீள ஆரம்பிக்காதது ஏன்?

#lka #SriLanka #Nimalarajan
மக்கள் முன் இன்னமுமே முன்வைக்கப்படாத புதிய நுண்நிதி சட்டமூலமானது தூக்குக்கயிற்றில் புதிதாக இடப்பட்ட முடிச்சாக மாறுமா? - பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம்

www.srilankafeministcollective.org/about-1-2

#lka #SriLanka 📸 Roar Media
ஓராண்டின் பின் மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணயசபை; தொழில் ஆணையாளரால் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு www.virakesari.lk/article/227846

#lka #SriLanka #MalaiyahaTamil 📸 @AP
நீதிமன்ற தலையீட்டையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையம் அகற்றப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

காணிகள் , வீடுகளை விட்டு பொலிஸார் வெளியேற்றப்பட்டு, அவற்றை தம்மிடம் ஒப்படைக்குமாறு, யாழ். மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு கால பகுதியில் 07 உரிமையாளர் வழக்கு தொடர்ந்தனர்.

படங்கள்: காலைக்கதிர்

#lka #SriLanka
பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவாவுக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது! maatram.org/articles/12361

#SriLanka #Genocide
மாகாண சபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம் maatram.org/articles/12355

by V. Thanabalasingham

#SriLanka #Elections
மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றோம் - பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை

#lka #SriLanka #SaveMannarIsland
வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார், முன்னாள் செயலாளர் து. தமிழ்ச்செல்வன் ஆகியோர், "வெடுக்குநாரிமலை தொல்பொருள் பூமி சம்பந்தமாக" வாக்குமூலம் பெறுவதற்காக எதிர்வரும் 09/10/2025 வவுனியா, பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
2006 திருகோணமலையில் கொல்லப்பட்ட தனது மகனுக்கும் ஏனைய நால்வருக்கும் நீதி கோரி இரு தசாப்தங்களாக போராடி வந்த வைத்தியர் கா. மனோகரனை நினைவுகூர்ந்து நேற்றுமுன்தினம் மாணவர் ஐவர் படுகொலை செய்யப்பட்ட கடற்கரையில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

#lka #SriLanka #Trinco5 #Trinco5Killings
மலையக மக்களது வீட்டிற்கான காணி மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணி தொடர்பாக கருத்து வெளியிட்டு வரும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தனியாருக்குக் குத்தகைக்கு விட முனையும் தோட்டங்களில் வாழும் மக்களின் காணியுடனான வீட்டுரிமைப் பற்றியோ அல்லது அவர்களது வாழ்வாதாரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. maatram.org/articles/12333

#lka #SriLanka #MalaiyahaTamil
அரச தோட்டங்களை தனியாருக்கு வழங்கும் முயற்சியும் அத்தோட்ட மக்களின் எதிர்காலமும்
Photo, AP Photo/Eranga Jayawardena நல்லாட்சி காலத்தின் போது இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிராந்தியக் கம்பனி என்பனவற்றின் கீழிருக்கும் நட்டமடையும் தோட்டங…
maatram.org
நினைவுகூருவோம்...
அஞ்சலி செலுத்துவோம்...
நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம்...

#lka #SriLanka #Trinco5 #Trinco5Killings #Trinco5case
சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட வைக்கக்கூடிய மார்க்கத்தில் பயணம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இனிமேலாவது தயாராக வேண்டும். maatram.org/articles/12326

by V. Thanabalasingham

#lka #SriLanka #NPP
"எனது மகன் ரஜீகர் என்னுடன் தொடர்பு கொண்ட கடைசித் தருணம் அவர் எனக்கு அனுப்பிய ஒரு மொபைல் தொலைபேசி செய்தியாகும். அதில் வெறுமனே ‘DAD’ என கூறப்பட்டிருந்து. அந்த செய்தி 2006 ஆண்டு ஜனவரி மாதம் 02 திகதி எனக்கு கிடைத்தது." maatram.org/articles/7993

#lka #SriLanka #Trinco5 #Trinco5Killings
2006 ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுள் தனது மகன் ரஜீகர் மனோகரனுக்கு நீதிகோரி ஓய்வின்றி போராடிவந்த மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது-84) எந்தவித நீதியும் கிடைக்கப்பெறாமல் நேற்று காலமானார்.

#lka #SriLanka #Trinco5
சுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்… maatram.org/articles/1972

by பேராசிரியர் தயா சோமசுந்தரம்

#lka #SriLanka #RajaniThiranagama
"புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்துவரப் போவதில்லை" - ராஜனி திராணகம maatram.org/articles/11051

by @Mahendran Thiruvarangan

#lka #SriLanka #RajaniThiranagama
கல்வியாளராகவும் மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் 1980களில் யாழ்ப்பாணத்தில் இருந்தவாறு செயற்பட்டுவந்த ராஜனி திராணகம படுகொலை செய்யப்பட்டு 36 வருடங்கள்.

#lka #SriLanka #RajaniThiranagama
"குப்பைத் தொட்டிக்கு மட்டுமே பொருத்தமானது” என்று நிராகரித்த கல்விச் சீர்திருத்தங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அங்கீகரித்துள்ளது. மேலும் கல்விச் சீர்திருத்தத்தை நிபுணர்களிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி நாடாளுமன்ற உரையில் கேட்டுக்கொண்டது நிலைமையை மோசமாக்கும் வகையில் நிபுணர்களின் கொடுங்கோன்மையை எளிதில் தழுவுவதை அம்பலப்படுத்தியுள்ளது. maatram.org/articles/12319

by Niyanthini Kadirgamar

#SriLanka #EducationReformsSL