pallivasalmurasu.bsky.social
@pallivasalmurasu.bsky.social
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம்.!

சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஆயுர்வேத மாணவர்கள் 39 பொது அறுவை சிகிச்சை முறைகளையும், கண், காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் வாய்-பல் மருத்துவ நோய்களுக்கு 19 அறுவை சிகிச்சை முறைகளையும் செய்யலாம்; விஜயவாடா…
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம்.!
சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஆயுர்வேத மாணவர்கள் 39 பொது அறுவை சிகிச்சை முறைகளையும், கண், காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் வாய்-பல் மருத்துவ நோய்களுக்கு 19 அறுவை சிகிச்சை முறைகளையும் செய்யலாம்; விஜயவாடா ஆயுர்வேத கல்லூரியில் உடனடியாக தொடர்புடைய முதுகலை படிப்புகள் மற்றும் உபகரணங்களை அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்துகிறார். அறுவை சிகிச்சைப் படிப்பில் முதுகலைப் படிப்புகளை முடித்து, முறையான பயிற்சி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் சுயாதீனமாக அறுவை சிகிச்சைகளை செய்ய சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 5:44 PM
தங்கம் விற்கிற ரேட்டுக்கு 100% ஆஃபர் அறிவித்த சேலம் நகைக்கடை.. குவிந்த மக்கள்.. கடைசியில் வந்த அதிர்ச்சி!

சேலம்:தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடை ஒன்று அறிவித்த “செய்கூலி, சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி” என்ற விளம்பரம்…
தங்கம் விற்கிற ரேட்டுக்கு 100% ஆஃபர் அறிவித்த சேலம் நகைக்கடை.. குவிந்த மக்கள்.. கடைசியில் வந்த அதிர்ச்சி!
சேலம்:தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடை ஒன்று அறிவித்த “செய்கூலி, சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி” என்ற விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆஃபரை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் கடைக்கு திரண்ட நிலையில், கடைசியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் ரூ.57,200 ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, தற்போது ஒரு லட்ச ரூபாயை தாண்டி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர நகைக்கடைகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 6:30 AM
கல்லூரி மாணவர்களுக்கு AI சந்தாவுடன் இலவச லேப்டாப்: ஜனவரி 5ல் தொடக்க விழா! – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 2026 ஜனவரி 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.…
கல்லூரி மாணவர்களுக்கு AI சந்தாவுடன் இலவச லேப்டாப்: ஜனவரி 5ல் தொடக்க விழா! – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 2026 ஜனவரி 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் மட்டுமல்லாமல் AI தொழில்நுட்ப சந்தாவும் வழங்கப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, 2025–26 நிதியாண்டு தமிழக பட்ஜெட்டில், அனைத்து கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 6:12 AM
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? – ஒரு ரியாலிட்டி செக்

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும், 8வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்பட்டதையடுத்து, சம்பள உயர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பொதுவாக, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை…
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? – ஒரு ரியாலிட்டி செக்
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும், 8வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்பட்டதையடுத்து, சம்பள உயர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பொதுவாக, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அமைக்கப்படும் ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம், ஊதிய நிலைகள் (Pay Levels) மற்றும் படிகளை மறுஆய்வு செய்து திருத்தம் செய்து வருகிறது. இந்த சம்பள உயர்வு பெரும்பாலும் Fitment Factor அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதனால், 8வது ஊதியக் குழுவில் உண்மையில் சம்பளம் எவ்வளவு உயர வாய்ப்பு உள்ளது என்பதை ஒரு “ரியாலிட்டி செக்” ஆக பார்க்கலாம்.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 6:12 AM
ஆஸ்திரேலியாவைப் போல இந்தியாவிலும் சமூக ஊடக தடை?

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதள தடை விதிக்க மதுரை ஹைகோர்ட் பரிந்துரை மதுரை:ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டு வர மத்திய அரசு…
ஆஸ்திரேலியாவைப் போல இந்தியாவிலும் சமூக ஊடக தடை?
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதள தடை விதிக்க மதுரை ஹைகோர்ட் பரிந்துரை மதுரை:ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையால், இந்தியாவிலும் சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர்.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 6:04 AM
காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு 18,689 பேர் அடுத்த கட்டத்திற்கு தேர்வு – இனி என்ன செய்ய வேண்டும்?

சென்னை:தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த…
காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு 18,689 பேர் அடுத்த கட்டத்திற்கு தேர்வு – இனி என்ன செய்ய வேண்டும்?
சென்னை:தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வுக்கான முடிவுகளை தேர்வர்கள் கடந்த சில வாரங்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த எழுத்துத் தேர்வில், மொத்தம் 18,689 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிட விவரம் தமிழக காவல்துறை மற்றும் சார்ந்த துறைகளில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் விவரம் வருமாறு: இரண்டாம் நிலை காவலர் (தமிழக காவல்துறை) – …
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 5:50 AM
வரலாறு படைக்கும் தங்கம் விலை..! ரூ.880 உயர்வில் சவரன் ரூ.1.04 லட்சம்!– வெள்ளியும் புதிய உச்சம்!

சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.880…
வரலாறு படைக்கும் தங்கம் விலை..! ரூ.880 உயர்வில் சவரன் ரூ.1.04 லட்சம்!– வெள்ளியும் புதிய உச்சம்!
சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.20 உயர்ந்து ரூ.274க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் இந்த தொடர் உயர்வு பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளே இந்தியாவில் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 5:47 AM
ஆஸ்திரேலியா போல இந்தியாவிலும் குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை வருமா?மதுரை உயர் நீதிமன்றத்தின் முக்கிய பரிந்துரை

மதுரை: 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என ஆஸ்திரேலியா சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், அதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலிக்க…
ஆஸ்திரேலியா போல இந்தியாவிலும் குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை வருமா?மதுரை உயர் நீதிமன்றத்தின் முக்கிய பரிந்துரை
மதுரை: 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என ஆஸ்திரேலியா சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், அதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு பழகினர். தற்போது இது வழக்கமாகி, சிறுவர்–சிறுமிகள் பலரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், குழந்தைகள் எளிதில் ஆபாச மற்றும் தீங்கான காணொளிகளை அணுகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 5:44 AM
உலகில் ஊழல் குறைவான நாடுகள் பட்டியல் வெளியீடு இந்தியா எந்த இடம்? முதலிடத்தில் தொடரும் ஆச்சரிய நாடு!

சென்னை:உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளை பட்டியலிடும் Corruption Perceptions Index – 2024 (CPI) அறிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ள நிலையில், எந்த நாடு…
உலகில் ஊழல் குறைவான நாடுகள் பட்டியல் வெளியீடு இந்தியா எந்த இடம்? முதலிடத்தில் தொடரும் ஆச்சரிய நாடு!
சென்னை:உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளை பட்டியலிடும் Corruption Perceptions Index – 2024 (CPI) அறிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ள நிலையில், எந்த நாடு முதலிடத்தில் உள்ளது, இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது என்பதுதான் தற்போதைய முக்கிய பேசுபொருளாக உள்ளது. ஊழல் என்பது ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகளிலும் காணப்படும் ஒரு பிரச்சினை. கடுமையான சட்டங்கள் இருந்தாலும், ஊழலை முற்றிலும் ஒழிப்பது எளிதானது அல்ல. உலக வல்லரசுகளாக கருதப்படும் நாடுகளும் கூட இந்த சவாலிலிருந்து தப்பவில்லை.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 5:26 AM
🔴 நடுவானில் அவசரம்… விமானிகள் கட்டுப்பாடு இழந்தாலும் Autoland மூலம் பத்திரமாக தரையிறங்கிய விமானம்!

வாஷிங்டன்:விமான விபத்து செய்திகள் கேள்விப்பட்டாலே பலருக்கும் அச்சம் ஏற்படும். ஆனால், அந்த அச்சத்தைக் குறைக்கும் வகையில் விமான பாதுகாப்புத் துறையில் ஒரு பெரிய புரட்சிகர முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.…
🔴 நடுவானில் அவசரம்… விமானிகள் கட்டுப்பாடு இழந்தாலும் Autoland மூலம் பத்திரமாக தரையிறங்கிய விமானம்!
வாஷிங்டன்:விமான விபத்து செய்திகள் கேள்விப்பட்டாலே பலருக்கும் அச்சம் ஏற்படும். ஆனால், அந்த அச்சத்தைக் குறைக்கும் வகையில் விமான பாதுகாப்புத் துறையில் ஒரு பெரிய புரட்சிகர முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. விமானிகள் எந்தத் தலையீடும் செய்ய முடியாத அவசர சூழ்நிலையில், Autoland என்ற தானியங்கி தொழில்நுட்பம் விமானத்தை முழுமையாகக் கட்டுப்படுத்து, பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. பொதுவாக விமானப் பயணம் மற்ற போக்குவரத்து முறைகளைவிட பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அரிதாக நடைபெறும் விமான விபத்துகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், பாதுகாப்பு அம்சங்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 5:25 AM
சிரியா ஹோம்ஸ் மசூதியில் வெள்ளி தொழுகை நேரத்தில் குண்டுவெடிப்பு – 8 பேர் பலி, 21 பேர் காயம்

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
சிரியா ஹோம்ஸ் மசூதியில் வெள்ளி தொழுகை நேரத்தில் குண்டுவெடிப்பு – 8 பேர் பலி, 21 பேர் காயம்
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த தாக்குதல், ஹோம்ஸின் வாடி அல்-தஹாப் பகுதியில் அமைந்துள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் நடைபெற்றது. இப்பகுதியில் அலவைட் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். தொழுகை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்ததாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 5:17 AM
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவுக்கு கடைசி நேர சிக்கலா?கோலாலம்பூரில் கனமழை எச்சரிக்கை… நிகழ்ச்சி நடக்குமா?

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக மலேசியாவில்…
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவுக்கு கடைசி நேர சிக்கலா?கோலாலம்பூரில் கனமழை எச்சரிக்கை… நிகழ்ச்சி நடக்குமா?
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக மலேசியாவில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் பயணத்தில் முழுமையாக களமிறங்க உள்ள விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுவதால், ‘ஜனநாயகன்’ படம் ரசிகர்களுக்கு செண்டிமெண்டாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே இந்த படம் கோலிவுட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியான தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க, இசை வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டுக்கு வெளியே நடத்த படக்குழு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 4:43 AM
உறுதி செய்யப்பட்டது: தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம்!தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல் – விஜய் முகாமில் உற்சாகம்

சென்னை:நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சிக்கு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுத் தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக…
உறுதி செய்யப்பட்டது: தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம்!தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல் – விஜய் முகாமில் உற்சாகம்
சென்னை:நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சிக்கு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுத் தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முதல் முறையாக எதிர்கொள்ள உள்ள தவெக, தேர்தல் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 விதிகளின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளித்திருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன், கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், …
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 4:40 AM
கண்ணுக்குத் தெரியாமல் நடந்த புரட்சி… ‘பவர்ஃபுல்’ தமிழ்நாடு! சூரிய மின்சாரத்தில் புதிய உச்சம்!

தமிழ்நாடு மின்சாரத்துறை வரலாற்றில் முக்கியமான திருப்பமாக, சூரிய மின்சார உற்பத்தியில் மாநிலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 23 அன்று, மாநிலத்தின் மொத்த மின் தேவையில் சூரிய சக்தியின் பங்களிப்பு…
கண்ணுக்குத் தெரியாமல் நடந்த புரட்சி… ‘பவர்ஃபுல்’ தமிழ்நாடு! சூரிய மின்சாரத்தில் புதிய உச்சம்!
தமிழ்நாடு மின்சாரத்துறை வரலாற்றில் முக்கியமான திருப்பமாக, சூரிய மின்சார உற்பத்தியில் மாநிலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 23 அன்று, மாநிலத்தின் மொத்த மின் தேவையில் சூரிய சக்தியின் பங்களிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளது. அன்றைய தினம், சூரிய மின்பலகைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் நேரடியாக தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) வலையமைப்புடன் இணைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. ஒரே நாளில் சுமார் 50.8 மில்லியன் யூனிட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையின் …
pallivasalmurasu.wpcomstaging.com
December 27, 2025 at 4:26 AM
நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு அமல் – நீண்ட தூரப் பயணிகளுக்கு மட்டும் கூடுதல் சுமை!

சென்னை:நாடு முழுவதும் இன்று முதல் புதிய ரயில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்துள்ள புதிய கட்டண அமைப்பின்படி, 215 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் கூடுதல் கட்டணம்…
நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு அமல் – நீண்ட தூரப் பயணிகளுக்கு மட்டும் கூடுதல் சுமை!
சென்னை:நாடு முழுவதும் இன்று முதல் புதிய ரயில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்துள்ள புதிய கட்டண அமைப்பின்படி, 215 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். குறுகிய தூரப் பயணிகளுக்கு எந்த மாற்றமும் இல்லை. புதிய விதிகளின்படி, சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் பயணிகள், ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதல் செலுத்த வேண்டும். மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு …
pallivasalmurasu.wpcomstaging.com
December 26, 2025 at 8:24 AM
புத்தாண்டு முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் ரயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம்

திருநெல்வேலி:ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இந்திய ரயில்வே துறை ரயில்களின் நேர அட்டவணையை மறுசீரமைத்து வருகிறது. அந்த வகையில், 2026 புத்தாண்டு முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் முக்கிய ரயில்களின்…
புத்தாண்டு முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் ரயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம்
திருநெல்வேலி:ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இந்திய ரயில்வே துறை ரயில்களின் நேர அட்டவணையை மறுசீரமைத்து வருகிறது. அந்த வகையில், 2026 புத்தாண்டு முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் முக்கிய ரயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால், இந்த பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் ரயில்களுக்கு அதிக அளவில் பயணிகள் இருப்பது வழக்கம். குறிப்பாக …
pallivasalmurasu.wpcomstaging.com
December 26, 2025 at 5:20 AM
பொதுத்துறை வங்கி வேலை: பேங்க் ஆஃப் இந்தியாவில் 400 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

சென்னை:பொதுத்துறை வங்கிகளில் முன்னணி இடம் வகிக்கும் பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 400 அப்ரெண்டீஸ்…
பொதுத்துறை வங்கி வேலை: பேங்க் ஆஃப் இந்தியாவில் 400 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
சென்னை:பொதுத்துறை வங்கிகளில் முன்னணி இடம் வகிக்கும் பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 400 அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 1906ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பேங்க் ஆஃப் இந்தியா, 1969ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கி, இந்தியா முழுவதும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஐபிபிஎஸ் தேர்வுகள் மட்டுமல்லாமல், சில பணியிடங்களை வங்கியே நேரடியாக அறிவிப்புகள் மூலம் நிரப்பி வருகிறது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 26, 2025 at 5:18 AM
திடீர் பாய்ச்சலில் தங்கம் விலை..!வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி விலை!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிந்தைய ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக உயரும் தங்க விலை, சாதாரண மக்களைத் தாண்டி பெரிய முதலீட்டாளர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக…
திடீர் பாய்ச்சலில் தங்கம் விலை..!வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி விலை!!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிந்தைய ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக உயரும் தங்க விலை, சாதாரண மக்களைத் தாண்டி பெரிய முதலீட்டாளர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதலீட்டு சந்தையில் நிலவும் பதற்றம் காரணமாக, தங்கம் மீண்டும் பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 0.5 சதவீதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 4,501.44 டாலராக வர்த்தகமானது. வர்த்தகத் தொடக்கத்தின் சில மணிநேரங்களிலேயே, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,530.60 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 26, 2025 at 4:59 AM
குஜராத் கட்ச் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் நிலநடுக்கம்..! அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில…
குஜராத் கட்ச் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் நிலநடுக்கம்..! அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது திடீரென ஏற்பட்ட அதிர்வால் பொதுமக்கள் பலரும் தூக்கத்திலிருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். நிலநடுக்கம் உணரப்பட்டாலும், இதுவரை உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்பதால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்டமாக கருதப்படுகிறது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 26, 2025 at 4:48 AM
“சிக்கன் விற்பனைக்கு தடை” – கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி… கோழிப் பண்ணை விவசாயிகள் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கடந்த சில நாட்களாக முட்டை மற்றும் சிக்கன் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து…
“சிக்கன் விற்பனைக்கு தடை” – கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி… கோழிப் பண்ணை விவசாயிகள் அதிர்ச்சி
திருவனந்தபுரம்: கடந்த சில நாட்களாக முட்டை மற்றும் சிக்கன் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழிக்கறி, வாத்து உள்ளிட்ட அனைத்து வகை பண்ணை பறவைகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலம் தொடங்கியதிலிருந்து முட்டை மற்றும் கறிக்கோழி வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்தது. சில்லறை சந்தையில் ஒரு முட்டை ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தாலும், கோழிப் பண்ணை விவசாயிகள் விலை உயர்வால் மகிழ்ச்சியடைந்திருந்தனர்.
pallivasalmurasu.wpcomstaging.com
December 24, 2025 at 11:11 AM
வங்கதேச மாணவர் தலைவர் கொலை: யூனுஸ் அரசுக்கு சகோதரர் கடும் குற்றச்சாட்டு

டாக்காவில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம் டாக்கா:வங்கதேசத்தில் மீண்டும் கடும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. மாணவர் தலைவர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.…
வங்கதேச மாணவர் தலைவர் கொலை: யூனுஸ் அரசுக்கு சகோதரர் கடும் குற்றச்சாட்டு
டாக்காவில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம் டாக்கா:வங்கதேசத்தில் மீண்டும் கடும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. மாணவர் தலைவர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த கொலைக்கு, தற்போதைய இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசே காரணம் என, உஸ்மான் ஹாதியின் சகோதரர் ஷெரீப் உமர் ஹாதி பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட பெரும் மக்கள் போராட்டத்துக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து விலகி, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 24, 2025 at 8:50 AM
10ஆண்டாக சென்னையில் சிகிச்சையளித்து வந்த போலி டாக்டர் கைது

கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்.. ஒக்கியம் துரைப்பாக்கத்தில், 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். ஓ.எம்.ஆர்.. ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஸ்வரன் கோவில் முதல் குறுக்கு தெருவில், விஜய் கிளினிக் மற்றும் ஹோம் விசிட்…
10ஆண்டாக சென்னையில் சிகிச்சையளித்து வந்த போலி டாக்டர் கைது
கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்.. ஒக்கியம் துரைப்பாக்கத்தில், 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். ஓ.எம்.ஆர்.. ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஸ்வரன் கோவில் முதல் குறுக்கு தெருவில், விஜய் கிளினிக் மற்றும் ஹோம் விசிட் சர்வீஸ் என்ற மருத்துவ மனையை, விஜயகுமார், 38, என்பவர் நடத்தி வந்தார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்ககத்தின் இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரி தலைமையின் கீழ் உள்ள மருத்துவ குழுவினர், நேற்று முன்தினம் இந்த மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது, விஜயகுமார் மருத்துவம் படிக்காமல். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல்.
pallivasalmurasu.wpcomstaging.com
December 24, 2025 at 7:31 AM
65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 20 லட்சம் கோடி ஊதியம் – 7வது மத்திய ஊதியக் குழு முடிவுகள்

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது மத்திய ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பர் 31 அன்று நிறைவடைகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தக் குழு 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு…
65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 20 லட்சம் கோடி ஊதியம் – 7வது மத்திய ஊதியக் குழு முடிவுகள்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது மத்திய ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பர் 31 அன்று நிறைவடைகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தக் குழு 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மொத்தம் ரூ. 20 லட்சம் கோடி ஊதியமாக வழங்கியுள்ளது. 7வது ஊதியக் குழு நீதிபதி மாத்தீஸ் குமார் தலைமையில் 2016 ஜனவரி 1 அன்று தொடங்கியது. குழு பரிந்துரைகளின் படி: 2.57 பொருத்தி காரணி மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 7,000-இருந்து ரூ. 18,000 ஆக 157% உயர்ந்தது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 24, 2025 at 6:55 AM
**ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் 9 பெரிய மாற்றங்கள் உங்கள் பணம் முதல் தினசரி வாழ்க்கை வரை! – அனைத்தையும் மாற்றப்போகும் புதிய விதிகள்!**

சென்னை: 2025 முடிவை எட்டும் நிலையில், புத்தாண்டான 2026 ஜனவரி 1 முதல் பொதுமக்களின் பணம், வங்கி சேவைகள், சம்பளம், விவசாயம், சமூக ஊடகம், எரிபொருள் விலை என பல துறைகளில்…
**ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் 9 பெரிய மாற்றங்கள் உங்கள் பணம் முதல் தினசரி வாழ்க்கை வரை! – அனைத்தையும் மாற்றப்போகும் புதிய விதிகள்!**
சென்னை: 2025 முடிவை எட்டும் நிலையில், புத்தாண்டான 2026 ஜனவரி 1 முதல் பொதுமக்களின் பணம், வங்கி சேவைகள், சம்பளம், விவசாயம், சமூக ஊடகம், எரிபொருள் விலை என பல துறைகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அன்றாட வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த 9 முக்கிய மாற்றங்கள் எளிமையாக இதோ: 1. கிரெடிட் ஸ்கோர் அப்டேட் – இனி வாரந்தோறும்இதுவரை 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்பட்டு வந்த கிரெடிட் ஸ்கோர், இனி வாரந்தோறும் புதுப்பிக்கப்படும். இதனால் கடன் வரலாறு, கடன் தகுதி போன்ற விவரங்கள் உடனுக்குடன் வங்கிகளுக்கு சென்றடையும்.
pallivasalmurasu.wpcomstaging.com
December 24, 2025 at 6:35 AM
“நீங்கள் செய்தால் நியாயம்… இந்தியா செய்தால் குற்றமா?” – சொந்த நாட்டிலேயே பாகிஸ்தானுக்கு எழுந்த கடும் கேள்வி

இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நியாயப்படுத்தும் நிலையில், இந்தியா பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கும் போது அதை எப்படி எதிர்க்க முடியும் என…
“நீங்கள் செய்தால் நியாயம்… இந்தியா செய்தால் குற்றமா?” – சொந்த நாட்டிலேயே பாகிஸ்தானுக்கு எழுந்த கடும் கேள்வி
இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நியாயப்படுத்தும் நிலையில், இந்தியா பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கும் போது அதை எப்படி எதிர்க்க முடியும் என பாகிஸ்தானை சேர்ந்த எம்பி ஒருவர் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கருத்து, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை குறிவைத்து பேசப்பட்டதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானின் ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் (ஃப) கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லூர் ரெஹ்மான், கராச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ஆப்கானிஸ்தானில் எதிரிகள் இருப்பதாக கூறி தாக்குதல் நடத்தினால், அதே காரணத்தை முன்வைத்து இந்தியாவும் பஹவால்பூர், முரிட்கே போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தியதாக சொன்னால் அதை எவ்வாறு மறுப்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
pallivasalmurasu.wpcomstaging.com
December 24, 2025 at 6:24 AM